Janu / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி பாரஸ்ட்டை விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் புதன்கிழமை (25) அன்று உத்தரவிட்டுள்ளது.
டெய்சி பாரஸ்ட் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், கடந்த விசாரணைகளின் போது, தமது கட்சிக்காரர் வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியிருந்தனர்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி மூலம் விசேட மனநல அறிக்கை ஒன்றை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
புதன்கிழமை (25) அன்று சமர்ப்பிக்கப்பட்ட குறித்த மருத்துவ அறிக்கையின்படி, பிரதிவாதி வழக்கு விசாரணைகளில் பங்கேற்கத் தேவையான மன ஆரோக்கியத்துடன் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அவரை வழக்கிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
சுமார் 73 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களைச் சட்டவிரோதமான முறையில் வருமானம் ஈட்டியதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக, யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
டெய்சி பாரஸ்ட் விடுவிக்கப்பட்டாலும், இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதியான யோஷித்த ராஜபக்ஷவிற்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையின் கீழ் அவருக்கு எதிரான வழக்குத் தொடரப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
33 minute ago
55 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
55 minute ago
58 minute ago
1 hours ago