Princiya Dixci / 2016 மார்ச் 31 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை, ஓடாவியார் வீதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள நீரோடை ஒன்றில் இருந்து நேற்று புதன்கிழமை (31) மாலை வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பாலமுனை, ஓடாவியார் வீதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பாலமுனை பகுதியைச் சேர்ந்த துவிச்சக்கரவண்டி திருத்துனரான 71 வயதுடைய எம். ஜெயினுலாப்தீன் (நண்டு பாஸ்) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி அவரின் மகன் தெரிவிக்கையில்,
தனது தந்தை, கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் நேற்றுக் காலை காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருந்த நிலையில் குறித்த நீரோடையில் சடலமொன்று தென்படுவதாகக் தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்று சடலத்தை மீட்டபோது அது எமது தந்தையுடையது என அடையாளம் கண்டோம் எனத் தெரிவித்தார்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago