Suganthini Ratnam / 2015 நவம்பர் 17 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ் அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படுமிடத்து, அது இனப்பிரச்சினை தீர்வுக்கான ஆரம்ப நிலையெனக் கருதமுடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
ஆனால், கைதிகளின் விடுதலை விடயத்தில் இறுக்கமான நிலை காணப்படின், நல்லாட்சியில் இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறு கிடைக்குமென்ற சந்தேகம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்புச் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமான கே.துரைராஜசிங்கம் ஆகியோர் இளநீர் வழங்கி இன்று செவ்வாய்க்கிழமை முடித்துவைத்தனர். இதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, இங்கு கருத்துத் தெரிவித்த "தமிழ் அரசியல் கைதிகள் முழுமையாக விடுதலை செய்யப்படும்வரை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் விடயத்தில் அக்கறையுடன் செயற்படுமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025