2021 மே 08, சனிக்கிழமை

கையெழுத்துப் போராட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 31 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை உள்வாங்க வேண்டுமென்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அங்குள்ள ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்ற கையெழுத்துப் போராட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டம் பெற்ற 1,500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளபோதிலும், இதுவரையில் அவர்களுக்கு எந்தவித நியமனமும் வழங்கப்படவில்லையென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ரி.கிசாந் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பலரும் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியபோதிலும், நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை இதுவரையில் எடுக்கப்படவில்லை. கஷ்டத்தின் மத்தியில் பட்டப்படிப்பை நிறைவுசெய்து 04 வருடங்கள் கடந்துள்ளபோதிலும், தங்களுக்கு நியமனம் வழங்கப்படாமை கவலையை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X