2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கொலை சம்பவத்துடன் தொடர்புடையோர் கைது

Niroshini   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த 15.08.2015ஆம் திகதி கொலை செய்யப்பட்ட ஜமால்தீன் அமீன் என்பவரது கொலையுடன் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பிரதான சந்தேக நபரும் அவருக்கு கைத்துப்பாக்கியை விற்பனை செய்தவரும் வாழைச்சேனை பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மீறாவோடை பாடசாலை குறுக்கு வீதியில் வசித்து வந்த அப்துல் மஜீட் முஹம்மது பஷீல் (வயது – 43), கல்முனை பி.பி.வீதியைச் சேர்ந்த ஆதம்பாவா முஹம்மது கடாபி (வயது – 38) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து  கொலைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் முதலாவது சந்தேக நபர் புத்தளம் கற்பிட்டி பகுதியில் வைத்தும் கைத்துப்பாக்கியை விற்பனை செய்தவர் கல்முனையில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக் கொலைச்சம்பவம் அரசியல் நோக்கத்துக்காக இடம்பெற்றதாக கூறப்பட்ட போதிலும் இக் கொலை குடும்பத்தகராறு காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .