2021 மே 12, புதன்கிழமை

சக்கரக்கதிரைகளும் காசோலைகளும் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விசேட தேவையுடைய 09 பேருக்கு சக்கரக்கதிரைகள் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

இதேவேளை, சுயதொழில் நடவடிக்கைக்காக தலா 25,000 ரூபாய் படி  நிதியுதவிக்கான காசோலைகள் 06 பேருக்கு வழங்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் புதிய காத்தான்குடி சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர் திருமதி எஸ்.சிவநாயகம், கிராம உத்தியோகஸ்தர்களான எம்.எம்.றவூப், எம்.ஜே.றசாக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், 'சமூகத்தில் நலிவுற்றவர்களை உயர்த்துவது, அவர்களை மேம்படுத்துவது எமது கடமையாகும். நாம் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். சுயதொழிலுக்காக பெறும் உதவியின் மூலம் உரிய நோக்கத்தை அடைய வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .