2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

சட்டவிரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியப் பிரஜைகள் 12 பேர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 19 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்தியப் பிரஜைகள், காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18) காத்தான்குடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் இவர்கள் ஈடுபட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இவர்களில் 40 வயதுக்கு மேற்பட்ட 5 பெண்களும் 7ஆண்களும் அடங்குகின்றனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்கள் காத்தான்குடியில் தங்கியிருந்தாகவும் காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி ஏ.பீ.என்.நிஸாந்த தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜைகளிடமிருந்து இலேகியம், எண்ணெய் மற்றும் தூள் உள்ளிட்ட சட்டவிரோத ஆயுர்வேத மருந்துகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்கர் ஆகியோரின் வழிகாட்டலில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெதரவின் ஆலோசனையில் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸ் நிலையக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X