2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சமாந்தரமான கிராம அபிவிருத்தித்திட்டத்தில் மட்டக்களப்புக்கு அநீதி

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

கிழக்கு மாகாணசபையின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் சமாந்தரமான கிராம அபிவிருத்தித்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் விகிதாசார முறையில் தெரிவுசெய்யப்படாமையால், தமிழ்க் கிராமங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அம்மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இம்மாவட்டத்துக்கு சமாந்தரமான கிராம அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, விகிதாசார முறையில் ஒதுக்கப்படவில்லை. இம்மாவட்டத்தில் 76 சதவீதமான தமிழர்களும் 23 சதவீதமான முஸ்லிம்களும் ஒரு சதவீதமான ஏனைய இனத்தவர்களும் வாழ்கின்றனர். இந்நிலையில், இத்திட்டத்துக்காக 04 கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இதற்காக 03 தமிழ்க் கிராமங்களும் ஒரு முஸ்லிம் கிராமமும் தெரிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், 02 தமிழ்க் கிராமங்களும் 02 முஸ்லிம் கிராமங்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக தமிழ்க் கிராமங்களுக்கு அநீதி  இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த திட்டத்துக்காக ஒரு கிராமத்துக்கு 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்படவுள்ள நிலையில், ஒரு தமிழ்க் கிராமம் தெரிவு செய்யப்படாமையால் 90 இலட்சம் ரூபாய் இல்லாமல் செல்வது கவலையான  விடயமாகும். இதற்கான காரணத்தைக் கேட்கும்போது, தீர்க்கமான  பதில் இல்லையெனவும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .