Suganthini Ratnam / 2016 மே 23 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய மீனவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் தங்களுக்குக் கிடைப்பதில்லை என உறுகாமம் கிராமிய மீனவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீரக வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு இன்று திங்கட்கிழமை உறுகாமம் கிராமிய மீனவர் அமைப்பு கடிதம்; அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'மட்டக்களப்பு, உறுகாமம் கிராமத்தில் வாழ்கின்ற மக்களில் 99 சதவீதமானவர்கள் மீனவக் குடும்பங்கள் ஆகும். இக்குடும்பங்கள் மீன்பிடித் தொழிலை மாத்திரம் நம்பி வாழ்கின்றன.
இந்தக் கிராமத்தில் தாங்கள் கூட்டங்களை நடத்துவதற்கு பொதுக்கட்டடம் இல்லாமை பெரும் சிரமமாக உள்ளது. மீனர்களின் நலன் கருதி கட்டடம் ஒன்று அவசியமாகின்றது. எனவே, மீனவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு மீனவர்களுக்கான பொதுக்கட்டடத்தை அமைத்துத் தருவதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்' எனக்; குறிப்பிடப்பட்டுள்ளது.
8 minute ago
19 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
55 minute ago