Niroshini / 2015 நவம்பர் 16 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
எமது பிரசேத பால் உற்பத்தியார்கள் மாடு வளர்ப்பதிலும் பால் விநியோகத்திலும் ஈடுபடுவதுடன் மாத்திரம் நின்றுவிடாது அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகளையும் பெறும் வகையில் சங்கங்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என இலுப்படிச்சேனை மில்கோ பால் சேகரிப்பு நிலைய முகாமையார் சங்கரப்பிள்ளை சசிதரன் தெரிவித்தார்.
மில்கோ பால் உற்பத்தியாளர் சமூக பாதுகாப்பு நிதியத்தின் மூலம் பால் உற்பத்தியளரக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மரப்பாலம் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்வில் அங்கத்தவர்களாகவிருந்து மரணமடைந்த பண்ணையார் இருவரது குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவும் பூப்புனித நீராட்டு விழாவுக்கு மூன்று குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரூபாவும் குழந்தை பிறந்த பண்ணையாளர் குடும்பத்துக்கு மூவாயிரத்து ஐந்நூறு ரூபாவும் உதவு தொகை வழங்கப்பட்டது.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மில்கோ பால் உற்பத்தியாளர் சமூக பாதுகாப்பு நிதியத்தின் மூலம் பால் உற்பத்தியார்களுக்கு பல்வேறு சலுகைள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவளையாறு மற்றும் மரப்பாலம் பால் உற்பத்தியாளர் சங்கங்களைச் சேர்ந்த இரண்டு பால் உற்பத்தியார்கள் மரணமடைந்துள்ளார்கள். அவர்களுக்கான மரணக் கொடுப்பனவு இன்று மில்கோ நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
வறிய பண்ணையார்களுக் கிடைக்கும் இந்த உதவி ஏனைய பண்ணையாளர்கiளும் சென்றடைய வேண்டும் மாடு வளர்த்து பாலை விநியோகிப்பதுடன் நின்றுவிடாது அரசாங்கத்தினால் கிடைக்க கூடிய உதவிகளையும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.

6 minute ago
9 minute ago
14 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
14 minute ago
44 minute ago