2025 நவம்பர் 09, ஞாயிற்றுக்கிழமை

ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் பலி

Editorial   / 2025 நவம்பர் 09 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிகிரியா காவல் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் உள்ள ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் மூழ்கி களனி, தலுகமவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

சிறுவன், தனது பெற்றோருடன் சனிக்கிழமை 8 ஆம் திகதி மாலை நீந்திக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். நீச்சல் தடாகத்தில்  மூழ்கிய சிறுவன் மீட்கப்பட்டு, உடனடியாக தம்புள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

சடலம் தம்புள்ள மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X