2021 மார்ச் 04, வியாழக்கிழமை

சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் கொளரவிப்பு

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு பாடும் மீன் லயன்ஸ் கழகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி மட்டக்களப்பு மாநகர சபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (28) நகர மண்டபத்தில் நடைபெற்றது.

'சேவைக்கு மகுடம் சூட்டும் மீனோசை' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், 130 சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் விருதுகள் மற்றும் வாழ்த்து மடல்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு பாடும் மீன் லயன்ஸ் கழகத்தின் தலைவர்; பி;. சராட்சரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மது பாவனையால் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகள், சுகாதாரச் சீர்கேடு, பாவனையைக் கட்டப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற மேலதிக அரசாங்க அதிபர் லயன் ரி; அருணகிரிநாதன், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம். உதயகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் ஆகியோர் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

நகர சுத்திகரிப்பு வேலைகளைச் செய்யும் தொழிலாளர்கள் முதன் முதலாக மட்டக்களப்பு பாடும் மீன் லயன்ஸ் கழகத்தினரால் கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .