2021 மார்ச் 01, திங்கட்கிழமை

சிறுமிக்கு சூடு வைத்த சம்பவம்: இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Niroshini   / 2016 மே 20 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடியில் சிறுமியொருவரை அவரது வளர்ப்புத்தாய் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் ரப்பாணி என்பவரும் மற்றும் அவரது மனைவி சிறுமியின் வளர்ப்புத்தாய் திருமதி மும்தாஜ் ஆகிய இருவரையும் காத்தான்குடி பொலிசார் கடந்த 13.3.2016 அன்று கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .