Sudharshini / 2015 நவம்பர் 28 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
'சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் துறைநீலாவணை தெற்கு பல்தேவைக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை (28) செயரலமர்வொன்று நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ரி.தயாளன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், சிறுவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் குறித்தும் அதனை தடுப்பதற்கு பெற்றோர்களினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், சிறுவர்களின் பாடசாலைக் கல்வி, சிறுவர்களின் உரிமைகள் மீறப்படும் போது அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது பெற்றோருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சி.அருந்ததி மற்றும் கிராம உத்தியோகஸ்தர்களான தி.கோகுலராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .