2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

சுவாமி விபுலானந்தரின் 69ஆவது சிரார்த்த தினம்

Sudharshini   / 2016 ஜூலை 19 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

கல்லடி சிவானந்தா வித்தியாலய ஸ்தாபகர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 69ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு, ஊர்வலமும் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தும்  நிகழ்வும் இன்று செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்றது.

சுவாமி விபுலானந்தர் சிவானந்தா நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லடி இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி பிரபு பிரபானந்தா மகராஜ்; சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். மலரஞ்சலியின் போது கிழக்குப் பல்கலைக்கழக அழகியற் கற்கைகள் நிறுவன விரிவுரையாளர்களினால் 'வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ' எனும் பாடல் பாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமாதியிலிருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு-கல்முனை வீதி வழியாக அனுமார் வீதி, பழைய கல்முனை வீதி ஊடாக கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று பாடசாலையைச் சென்றடைந்தது.

நூற்றாண்டு சபையின் தலைவர் கே. பாஸ்கரன், செயலாளர் ச. ஜெயராஜா, சிவானந்த வித்தியாலய அதிபர்
கே. மனோஜ்ராஜ், விவேகானந்தா மகளிர் வித்தியாலய அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .