2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

தமிழரசுக்கட்சி தலைவர்களை நினைவுகூர தவறிவிட்டது

Niroshini   / 2016 மார்ச் 21 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

'தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புமிக்க சேவைகளையாற்றிய தலைவர்களை நினைவுகூர தமிழரசுக்கட்சி தவறிவிட்டது' என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சி உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் அமிர்தலிங்கத்தின் பாரியார் மங்கையற்கரசியின் அஞ்சலிக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(20) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இதன்பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இங்கு நாங்கள் மங்கையற்கரசி அம்மையாருக்கு அஞ்சலி செலுத்தும்போது, மறைந்த தலைவர் அமிர்தலிங்கம் ஐயாவையும் தொட்டு நிற்கின்றோம். நாங்களும் சில தவறுகளை செய்துகொண்டே உள்ளோம். ஒருவர் மறைந்த பின்னர் அவர் தொடர்பில் பேசுகின்றோம். அவர் புகழ்பாடுகின்றோம்.

ஆனால், ஒருவர் உயிருடன் உள்ளபோது அவரது சேவையை நாங்கள் சமூகத்துக்கு எடுத்துக்கூற வேண்டும். அவ்வாறு இருக்கும்போதே உண்மையான நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்பவர்களாக திகழ்வோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .