Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.வடிவேல் சக்திவேல்
தமிழர்களிடமிருந்தே முஸ்லிம்கள் அரசியலை கற்றுக்கொண்டனர். தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகள் அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளன. ஆட்சியில் எந்த அரசாங்கம் வருகின்றதோ, அவர்களுடன் சேர்ந்துநின்று முஸ்லிம் சமூகத்தினர் தங்களுக்கான அபிவிருத்திகளை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், தமிழ்ச்; சமூகத்திடம் இது குறைவாகவுள்ளதென கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வு, களுவாஞ்சிக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'முஸ்லிம் சமூகத்திலுள்ள அனைத்து பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களை ஆதரித்து அவர்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், இவ்வாறான விடயத்தை தமிழ்ச் சமூகம் தவறவிட்டிருக்கின்றது' என்றார்.
'மேலும், பட்டிருப்புத்தொகுதி மக்களில் பலர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சரியான முறையில் நடந்துகொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றேன். பட்டிருப்புத்தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக எவரும் இம்முறை தெரிவு செய்யப்படாவிட்டாலும், இப்பகுதியில் பாரிய அபிவிருத்திகளை நான் மேற்கொள்வேன். அந்த வகையில், களுவாஞ்சிக்குடியில் அமைக்கப்படவுள்ள பஸ் தரிப்பிடத்துக்காக 90 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்யவுள்ளேன். அத்துடன், இப்பகுதி புத்திஜீவிகளுடன் இணைந்து மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்.
மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபையை நகரசபையாக மாற்றுவதற்குரிய என்னாலான ஒத்துழைபை வழங்குவேன்' எனவும் அவர் தெரிவித்தார்.
23 minute ago
35 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
36 minute ago
1 hours ago