Freelancer / 2026 பெப்ரவரி 07 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்மலானையில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் முற்றியதில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தர்மாராம வீதி புகையிரத பாதைக்கு அருகில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையில் நேற்று (06) வாக்குவாதம் முற்றியுள்ளது.
இந்த நிலையில் ஒரு தரப்பினர் கிரிக்கெட் மட்டை மற்றும் விக்கெட் தடிகளால் இளைஞன் ஒருவரை தாக்கியுள்ளனர்.
இத் தாக்குதலில் பலத்த காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு தொடர்பில் நான்கு பெண்கள், இரு ஆண்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago