Suganthini Ratnam / 2016 ஜூலை 18 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
அம்பாறை மாவட்டத்தின் றாணமடு இந்து மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் அற்புதராஜா மிராளினி அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்டத்திலான தமிழ் இலக்கணப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
பாடசாலை வரலாற்றில் இம்மாணவியினுடைய சாதனையானது என்றுமே அழிக்க முடியாத காலச்சுவடுடாக, பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கிழக்கு மாகாண பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டத்துக்கு குறித்த மாணவி தெரிவாகி தற்போது தேசிய ரீதியாக முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவி சம்மாந்துறை கல்வி வலயத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களான அற்புதராசா - பிரதட்சனி தம்பதியினரின் புதல்வியாவார். மாணவியினுடைய திறமைக்கு கல்விச் சமூகத்தினர் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவிக்கின்றனர்.
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
2 hours ago