2021 ஜனவரி 16, சனிக்கிழமை

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிப்பதற்கு மாகாண சபையின் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை கூட்டத்தின்போதே, இந்த அங்கிகாரம் வழங்கப்பட்டு இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் 445 தொண்டர் ஆசிரியர்கள் பாடசாலைகளில் கடமையாற்றுகின்றனர். இவர்களின் தமிழ்மொழி மூலம் 411 தொண்டர் ஆசிரியர்களும் சிங்களமொழி மூலம் 19 தொண்டர் ஆசிரியர்களும் தேசிய பாடசாலைகளில் 15 தொண்டர் ஆசிரியர்களும் கடமையாற்றுகின்றனர்.

இவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கி நிரந்தர ஆசிரியர்களாக நியமிப்பதற்கான கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை அங்கிகாரம் இதன்போது வழங்கப்பட்டு இவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றறிக்கையை கிழக்கு மாகாண கல்வியமைச்சு வெளியிடவுள்ளதுடன், அதற்கான அங்கிகாரத்தை கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .