2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

திருச்சபையில் திருட்டு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஆலம்குளம் கிராமத்திலுள்ள அமெரிக்கன் சிலோன்மிஷன் திருச்சபையில் திருட்டுப்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாரந்த வழிபாட்டு நடவடிக்கைகளுடன்; ஏனைய நாட்களில் முன்பள்ளி பாடசாலையாகவும் இந்த திருச்சபை இயங்கிவருகின்றது. இந்த நிலையில், முன்பள்ளிப் பாடசாலையின் விடுமுறை முடிந்து எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த திருச்சபையைi சுத்தம் செய்வதற்கு முன்பள்ளி ஆசிரியர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை சென்றனர். இதன்போது, திருச்சபையின் கதவுப் பூட்டு உடைக்கப்பட்டு  திருட்டு போயுள்ளதை அவதானித்துள்ளனர்.

50 கதிரைகள், 40 சிறிய கதிரைகள் மற்றும் 2 பெரிய மேசைகள் திருட்டுப் போயுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாiணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .