Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 ஜூலை 24 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏழை விவசாயிகளின் புன்சிரிப்பே நல்லாட்சிக்கான சமிஞ்ஞையாகும். இந்த நல்லாட்சி அரசாங்கம் விவசாயிகளின் நலன்கருதி செயற்படுகின்றது என்பதனை நீர்ப்பாசன இணைப்புத்திட்டம் நிறுவி நிற்கிறது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
சித்தான்டி,சின்னவெளி, சின்னாளன்வெளியில் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற அறுவடை நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 'இந்த நல்லாட்சியை கொண்டு வருவதற்காக சிறுபான்மையினராகிய தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டோம். அந்த ஒற்றுமை எதிர்காலத்திலும் நீடித்து நிலைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அப்போது தான் நமது பொதுப்பிரச்சினைகளுக்கான தீர்வினை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த நல்லாட்சியில்; ஜனாதிபதி ஒரு விவசாய மகன். அவருக்கு விவசாயிகளின் பிரச்சினைகள், கஷ்டம், துன்பம் என எல்லாம் தெரியும்.
அத்தோடு, இந்த நல்லாட்சியின்; பிரதமர் செயற்திறன் மிக்கவர். விவசாய நடவடிக்கைகளில் விவசாயிகள் பற்றி தெளிவாக தெரிந்தவர். இந்த அரசின் செயற்பாடுகள், நம் நாட்டின் முதுகெலும்புகளான விவசாயிகளை முன்னேற்றுவதும், புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வதும், அந்தத் தொழில்நுட்பங்களை பிரயோகிப்பதற்கான பயிற்சியினை வழங்குவதும் ஆகும் ' எனறார்.
'நல்ல திட்டங்களை யார் கொண்டு வந்தாலும் அதனை நான் வரவேற்கிறேன். அதனை வாழ்த்துகிறேன். அத்தோடு, அவைகளுக்காக எனது ஒத்துழைப்பையும் நான் வழங்குவேன். கடந்த காலங்களில் மிகக்கொடூரமான யுத்தத்துக்கு முகங்கொடுத்த இந்தப் பிரதேசம், விவசாயத்திலும் கல்வியிலும், வியாபாரத்திலும் நலிவடைந்து போயுள்ளன. இதனை சரி செய்து நிமிர்த்துவது இந்த நல்லாட்சியினதும் அதன் பங்காளர்களான எமதும் தலையாயக் கடமையாகும். நீர்பாசன இணைப்புத்திட்டத்திட்டத்தினால் இம்முறை அறுவடை அதிகம் பெற்றதாகவும் விவசாயத்துக்கு தேவையான நீர் கிடைத்ததாகவும் இந்தப்பிரதேசத்து விவசாய சங்கத்தலைவர் கூறினார்.
இவ்வாறான விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற திட்டங்களை நான் வரவேற்கிறேன். இந்த திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்த எல்லாத்தரப்பினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த நல்லாட்சியை கவிழ்க்க எதிர்வரும் 28ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை, நல்லாட்சியின் எதிரிகளால் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிகிறோம். அவர்கள் கடந்த அரசில் மக்களை சுரண்டி வாழ்ந்த ஊழல்மிக்கவர்கள், தங்களை பாதுக்காவும்,தாம் ஒளிந்து கொள்ளவும் இடம் தேடுகிறார்கள். இந்த விடயத்தில் சிறுபான்மையினரான நாம் ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். அவர்களின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு செய்த ஊழலுக்கான தண்டனைகளை பெறும் காலம் மிகவிரைவில் வரும். எனவே இந்த நல்லாட்சியை பாதுகாப்பதில் நாம் இணைந்து செயற்படுவோம்' என கூறினார்.
1 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago