2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

'நல்லாட்சியில் முஸ்லிம்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்'

Kogilavani   / 2017 மே 19 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

'கடந்த அரசாங்கத்தில், மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சிக்டிகாலத்தில் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் சொத்துகள் அழிக்கப்பட்டன. அதனாலேயே, 95 சதவீத முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஆட்சியையே மாற்றினார்கள். ஆனால் இன்று, அதைவிட மிகமோசமாக முஸ்லிம் சமுகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது' என, மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஆரையம்பதி ஒல்லிக்குளத்தில், வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

'முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளைகளை ஒழிப்போம் என ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம், அதனை இதுவரை நிறைவேற்றவில்லை. முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்தநிலைமை தொடர அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைச் சந்தித்து பேசவிருக்கிறேன்.

ஞானசார தேரர் சட்டத்தை கையிலெடுத்து செயற்படுகின்றார். அதேபோல, ஏனைய சமுகத்தினரும் சட்டத்தைக் கையில் எடுத்தால் இந்த நாட்டிலே இரத்த ஆறுதான் ஓடும். 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வந்து நாட்டைக்கட்டியெழுப்ப முயற்சிக்கின்றபோது,  சர்வதேச விசமிகளின் கைக்கூலிகள்  முஸ்லிம்களை தமது ஆதிக்கத்துக்குள் அடக்க முயற்சிக்கின்றனர்.

பதவிகளுக்காக அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பதாக நீங்கள் எண்ணக்கூடாது.சமுகத்திற்காகத்தான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம். ஒருகாலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் எதிரிகளாகச் செயற்பட்டனர். ஆனால், இன்று மிகவும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். அதேபோல் காலம் காலமாக தென்பகுதியில் சிங்ளகமக்களும் முஸ்லிம்களும் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்துவருகின்றனர். அவற்றைக் குழப்பி இனங்களிடையே மோதல்களை உண்டுபண்ண இத்தகைய சத்திகள் முனைகின்றன' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X