Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
பசுமைப்புரட்சியை பிரதேசத்தில் ஏற்படுத்தும் பொருட்டு முதல் கட்டமாக இரசாயன நச்சுக்கள் அற்ற கத்தரிக் கன்றுகளை உற்பத்தி செய்து வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வழங்கி வைத்ததாக பட்டிப்பளைப் பிரதேச மனிதநேயக் காப்பகத்தின் தலைவர் வைத்தியர் நா.பன்னீர்செல்வம், சனிக்கிழமை (24) தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் பயன்தரக்கூடிய சிறந்த திட்டங்களில் கிடைக்கும் உதவிகளைப் பயன்படுத்தி நோயற்ற வாழ்வை அடுத்த சந்ததிகளுக்கு வழங்க வேண்டும். மனிதநேயக் காப்பகம் கடந்த நான்கு மாதங்களில் நான்கு செயலமர்வுகளை நடாத்தி இருப்பதை மகிழ்வோடு தெரிவிப்பதோடு எமது காப்பகத்திற்கு சுவீஸ் நாட்டில் இருந்து உதவி வழங்கிய நலன்விரும்பிகளும் காப்பக உறுப்பினர்களுக்கு நன்றிகளையும் கூறுகின்றேன்.
உலகெங்கும் உள்ள வறுமையாலும் நோயினாலும் பசியினாலும் யுத்தக்கொடுமையாலும் அகதிகளாகவும் கைதிகளாகவும் வாழ்கின்ற மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் சுகமாகவும் வாழ இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
32 minute ago
53 minute ago