Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூலை 24 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்ப்;பாசன மற்றும் விவசாயத்துறை அபிவிருத்திகளுக்காக இவ்வருடம் 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
இதேவேளை, கித்துள் -உறுகாமம் நீர்ப்பாசனக் குளங்களின் இணைப்புக்கு முதற்கட்டமாக கட்டடப் பணிக்கு 50 ரூபாய் மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிதி இவ்வருட இறுதிக்குள் முறையாகச் செலவிடப்பட்டு முடிய வேண்டுமென்பதுடன், அதற்கு நீர்ப்;பாசன திணைக்கள அதிகாரிகளும்; மக்கள் பிரதிநிதிகளும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பு, உறுகாமம் நீர்ப்பாசன திட்ட முகாமைத்துவக் குழுவின் ஏற்பாட்டில் சிறுபோக அறுவடை விழா, சின்னவெளிக் கண்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்; கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் எவ்விதமான சவால்களுக்கும் முகங்கொடுத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது. இச்சூழ்நிலையில், அரசாங்கத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் எங்களில் ஒரு சிலர் அல்லது பிரத்தியேகமாக ஒரு குழுவினர் மேற்கொண்டுவரும் முயற்சிகளை சவாலாக ஏற்றுக்கொள்ளவும் நல்லாட்சி அரசாங்கம் தயாராகவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின்; தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை எந்தவொரு சக்தியாலும் வீழ்த்த முடியாது' என்றார்.
'எமது நாட்டில் வெவ்வேறு மொழிகளைப் பேசக்கூடிய பல இன மக்கள் வாழ்ந்துவருகின்றமை எமது நாட்டுக்கு அழகாகும்.
இந்த மாவட்ட மக்களின் கண்ணீர் காவியம் எனக்கு நன்றாகத் விளங்குகிறது. கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தால் விலை மதிப்பீடு செய்ய முடியாதவற்றை இழந்தோம். இப்போது வேலையில்லாமை, பொருளாதாரம் போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம். இப்பிரச்சினைகளுக்கு துப்பாக்கிகளால் தீர்வு காண முடியாது' எனவும் அவர் மேலும் கூறினார்.
15 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago