2021 மே 06, வியாழக்கிழமை

நேர்முகப்பரீட்சை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 17 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரிக்கு 2016ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர் ஆசிரிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை நாளை புதன்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 30ஆம் திகதிவரை காலை 08.30 மணி முதல் மாலை 04 மணிவரை நடைபெறவுள்ளது.  

மட்டக்களப்பு, தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த நேர்முகப் பரீட்சையில் தோற்றவுள்ளவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் தங்களின் ஆவணங்களை உரிய அதிகாரிகளிடம்  அத்தாட்சிப்படுத்த வேண்டுமென்பதுடன், இம்முறை பிரதேச செயலக ரீதியாக தெரிவு மேற்கொள்ளப்படவுள்ளதால் பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தலுடன் நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்ளுமாறும் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்த நேர்முகப் பரீட்சைக்கு அகில இலங்கை ரீதியாக 1,495 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சித்திரப்பாடத்துக்கு 553 பேரும் நாடக அரங்கியல் பாடத்துக்கு 480 பேரும் கலையும் கைப்பணியும்; பாடத்துக்கு 462 பேரும் அழைக்கப்பட்டுள்ளனர்.  

மேலும், வவுனியா கல்வியற்; கல்லூரியில் ஆரம்பக்கல்வி பாடத்துக்கும் யாழ்ப்பாண கல்வியற் கல்லூரியில் விஞ்ஞானப் பாடத்துக்கும் ஊவா தேசிய கல்வியக் கல்லூரியில் உடற்கல்விப் பாடத்துக்குமாக  நேர்முகப்பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டக்களப்பு தேசிய கல்வியக் கல்லூரிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  வடிவமைப்பும் கட்டட தொழில்நுட்பமும், மின் இலத்திரனியல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கும் குறித்த திகதிகளில் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியில்  நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதாகவும்  அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .