எம்.எம்.அஹமட் அனாம் / 2019 நவம்பர் 28 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தின் ஏற்பாட்டில், வீதி போக்குவரத்து விதி நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகள் ரீதியாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடிக் கல்விக் கோட்டத்திலுள்ள 28 பாடசாலை மாணவர்களுக்கான இரு நாள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு, ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் நேற்று முன்தினமும் நேற்றும் (27) நடைபெற்றது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.ஏ.நஸீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது வாழைச்சேனை பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்து பொலிஸாரால் வீதி போக்குவரத்து விதி நடைமுறைகள் தொடர்பாக மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் செயற்பாடுகளை மாணவர்களுக்கு பயிற்சி மூலம் தெளிவுபடுத்தினர்.
மேலும், குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொண்டு பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள், வீதி போக்குவரத்து விதி நடைமுறைகள் தொடர்பான சஞ்சிகையும் அதிதிகளால் வழங்கப்பட்டன.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago