Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்
கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பெரியநீலாவணை, புலவர்மணி, சரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில், வகுப்பறையொன்றில் அடிக்கி வைக்கப்பட்டிருந்த கதிரைகளுக்கு, இனந்தெரியாதவர்கள், நேற்று (04) இரவு தீ வைத்துள்ளனர் என, பாடசாலையின் அதிபர் எம்.எம்.முஹம்மட் நியாஸ் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அதிபர் மேலும் தெரிவிக்கையில், வழமை போன்று பாடசாலை நாளான இன்று (05) காலை, தனக்குக் கிடைத்த தகவலையடுத்து, பாடசாலைக்குச் சென்றபோது, குறித்த கதிரைகள் தீக்கிரையாகிக் கிடப்பதைக் கண்டதாகக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக வலய கல்விப் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தியதோடு, கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago