2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

பொதுத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் மும்முரம்

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொதுத் தேர்தலுக்கான ஆயத்தங்களில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகமும் ஈடுபட்டுள்ளதாக, மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்டச் செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (11) அவர் விளக்கமளிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 409,595 வாக்காளர்கள் இம்முறை வாக்களித் தகுதிபெற்றுள்ளனரெனவும் மட்டக்களப்பு தொகுதியில் 192,809 வாக்காளர்களும் கல்குடாத் தொகுதியில் 119,928 வாக்காளர்களும் பட்டிருப்புத் தொகுதியில் 97,071 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்றார்.

மாவட்டத்தில் 416 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் மட்டக்களப்புத் தொகுதியில் 185 வாக்குச்சாவடிகளும் கல்குடாவில் 155 சாவடிகளும் பட்டிருப்பில் 116 வாக்குச் சாவடிகளும் நிறுவப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்..

இதேவேளை, மட்டக்களப்பில் நேற்று நண்பகல் வரை ஐந்து சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மட்டக்களப்பு தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மட் றுஸ்வின், எம்.ரி.உவைஸ், ஏறாவூரைச் சேர்ந்த ஏ.எம்.அஸ்மி, ஆர்.எம்.இம்றான் ஆகியோரும் ஓட்டமாவடியைச் சேர்ந்த எஸ்.எம்.தௌபீக் என்பவருமாக ஐந்து பேர் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இம்மாதம் 18ஆம் திகதி நண்பகள் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .