2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

‘பின்தங்கிய நிலையில் மண்முனை மேற்கு’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச சபை போதிய நிதி உதவிகளோ வளங்களோ இல்லாத நிலையில் இயங்கிவருவதாக அதன் தலைவர் எஸ்.சண்முகராஜா தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர்,  மண்முனை மேற்கு பிரதேச சபை ஊடாகச் செய்யவேண்டிய திட்டங்கள் பல இருந்தும் அதற்கான நிதி உதவிகளோ வளங்களோ இல்லாத நிலையில் தாம் இருப்பதாகத் தெரிவித்தார்.

தான் தவிசாளராகப் பதவியேற்று ஒன்றரை வருடம் கடந்தும் இன்றுவரை உள்ளூராட்சி அமைச்சால் எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லையெனத் தெரிவித்த அவர், கம்பெரலிய திட்டங்கள் தமது பிரதேச சபையின் ஊடாகச் செயற்படுத்தப்படுமானால் தமது சபைக்கும் ஓரளவு வருமானம் கிடைக்குமென்றும் இதற்கு அமைச்சர்கள் உதவிபுரிய வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இந்த விடயத்தை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .