2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

848,030 பயனாளிகளை இலக்காகக்கொண்டு அபிவிருத்திகள்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 12 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் 848,030 பயனாளிகளை இலக்காகக் கொண்டு 03 வருடங்களில் 11,825.57 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
 
இந்த வருடத்தில் 4,730.23 மில்லியன் ரூபாய் செலவிலும் 2017ஆம் ஆண்டில் 3,547.67 மில்லியன் ரூபாய் செலவிலும் 2018ஆம் ஆண்டில்; 3,547.67 ரூபாய் செலவிலும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
 
மனிதாபிமான உதவி, குடியிருப்பு வசதி, கல்வி அபிவிருத்தி, குடிநீர் வசதி, மலசலகூட வசதி, சுகாதாரம், போஷாக்கு மேம்பாடு, கிராமிய வீதிகள் புனரமைப்பு, சிறு குளங்கள் புனரமைப்பு, நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தல், சமூக மற்றும் கலாசார அபிவிருத்தி, வருமான அதிகரிப்பு வாழ்வாதார மேம்பாடு, திறன் மற்றும் தொழில் கல்வி அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அபிவிருத்தி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X