2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

பஸ் குடைசாய்ந்ததில் 6 பேர் காயம்

Thipaan   / 2016 ஜூலை 17 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கை போக்குவரத்து சபையின் ஏறாவூர் சாலைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மட்டக்களப்பு தன்னாமுனை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாதில், அறுவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (17) இடம்பெற்ற இச் சம்பவத்தில், வாழைச்சேனை இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது.

பஸ்ஸின் அதிகரித்த வேகமே இதற்குக் காரணமென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவயவந்திருக்கின்றது. மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .