2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

'பிரச்சினைகளுக்கு உதவி வேண்டி 400 பேர் வருகின்றனர்'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 19 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பல்வேறு பிரச்சினைகளுக்காக தீர்வு வேண்டி தேவை நாடும் மகளிர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையிடம் மாதாந்தம் 400 பேர் வருவதுடன், இவர்களில் 300 பேரின் பிரச்சினைகளுக்கு உடனேயே தீர்வு காணப்படுவதாக அந்த அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி சங்கீதா தர்மரஞ்சன் தெரிவித்தார்.

குடும்ப வன்முறை தொடர்பான பிரச்சினைகளுக்கே  அதிகளவானோர் உதவி நாடி வருகின்றனர். கணவர் மதுபானம் அருந்துதல் மற்றும் போதைவஸ்துப் பாவிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள், குடும்பங்களில் ஆணாதிக்கம் மேலோங்கிக் காணப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தமது அமைப்பிடம் பலர் உதவி நாடி வருகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளுக்காக உதவி நாடி  தம்மிடம் வருபவர்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதுடன், சிலருக்கு உளவியல் ரீதியான சிகிச்சை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், தம்மால் தீர்க்கப்படாமல் போகும் பிரச்சினைகளுக்கு நீதிமன்றம், வைத்தியசாலை, பொலிஸ் நிலையம், பெண்கள்; சிறுவர் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்தோரிடம் ஒப்படைப்பதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .