2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

போரதீவுப்பற்றில் காடுகளை துப்புரவு செய்யும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் காட்டு யானைகள் தங்கியுள்ள காடுகளை துப்புரவு செய்யும் நடவடிக்கை, அப்பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (06) மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக விவேகானந்தபுரம் கிராமத்தில் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகம், போரதீவுப்பற்று பிரதேச சபை, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வனவிலங்கு இலாகா, மட்டக்களப்பு கச்சேரி, அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து இந;நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.  

மேலும், காட்டு யானைகளைப் பிடித்து சரணாலயத்தில் விடுவதற்காக அநுராதபுரத்திலிருந்து விசேட குழுவென்றும் செவ்வாய்கிழமை மாலை இங்கு வருகை தந்துள்ளதாக  பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X