2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பிள்ளையார் கோவில் வீதி புனரமைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 29 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, செங்கலடியில் 40 வருடங்கள் பழமை வாய்ந்த பிள்ளையார் கோவில் வீதி இன்று வெள்ளிக்கிழமை கொங்கிறீட் இட்டு செப்பனிடப்பட்டது.
 
கிழக்கு மாகாணசபையின் குறித்து ஒதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை மூலம்    168 மீற்றர் தூரம் 1,733,479 ரூபாய் செலவில் கொங்கிறீட் இடப்படவுள்ளதாக ஏறாவூர்ப் பற்று பிரதேசசபை செயலாளர் திருமதி குமுதா ஜோன்பிள்ளை தெரிவித்தார்.
 
தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இவ்வீதி புனரமைக்கப்படாமை காரணமாக இவ்வீதியூடாகச் பயணிப்பவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவந்தனர்.
 
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியையும் ஏ-5 செங்கலடி பதுளை வீதியையும் இணைக்கும் இக்குறுக்கு வீதியின் இரு முனைப் பகுதியில் மாத்திரம் கொங்கிறீட் இடப்பட்டுள்ளதால் ஏனைய நீளமான பகுதி குண்டும் குழியுமாகக் காட்சியளித்தது. இவ்வீதியின் அவல நிலை குறித்து பிரதேசசபை நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்ததன் பயனாக தற்போது கொங்கிறீட் இட்டு செப்பனிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .