2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

போஷாக்கு விழிப்புணர்வு ஊர்வலம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எம்.அஹமட் அனாம்

தேசிய போஷாக்கு மாத நிகழ்வுகளை சிறப்பிக்கும் முகமாக 'ஆரோக்கியமான உடலமைப்புக்கு அளவோடு உண்ணுங்கள்' என்ற தொனிப்பொருளில் போஷாக்கு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் நகரில் இடம்பெற்றது.

சுகாதர வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபை அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்பநல மருத்துவ மாதுக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலையச் சந்தியிலிருந்து ஆரம்பமாகிய இந்த ஊர்வலம், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைவரை சென்றது.

இவ்வாறான மற்றுமொரு விழிப்புணர்வு ஊர்வலம்  வாழைச்சேனை பிரதேசத்திலும் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X