வா.கிருஸ்ணா / 2020 மார்ச் 12 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்குக்கு உள்ளானவர்களை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கக் கூடாதென வலியுறுத்தி, மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று, இன்று (12) முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியின் தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்விமனோகர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மகளிர் அணி உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
“யுத்ததால் எமது உறவுகள் அழிந்தது போதாதா?”, “மட்டக்களப்பு மாவட்ட மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்போம்”, “கொரோனா சிகிச்சை மட்டக்களப்பில்வேண்டாம்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏழை மக்களே சிகிச்சை பெறச்செல்லும் நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது, அதன்மூலம் ஏழை மக்களே பாதிக்கப்படும் நிலையேற்படும் என்பதுடன், அது மாவட்டம் முழுவதும் தொற்றும் நிலையேற்படும் என, போராட்டத்தில் கலந்துகொண்டோர் கோஷமிட்டனர்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago