2021 ஜனவரி 23, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 22 தேர்தல் முறைப்பாடுகள்

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, வ.சக்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில், இன்று காலை தேர்தல் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இதுவரையில் 22 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக,மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரியும் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முற்பகல் 11 மணி வரையில் 22.49 சதவீதம் வாக்களிப்பு வீதம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தேர்தல் நடவடிக்கையின் பிரதான நிலையமாக செயற்படும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமுகமான முறையில் வாக்களிப்பு நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 428 வாக்களிப்பு நிலையங்களிலும் 398,301 வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது கல்குடா தேர்தல் தொகுதியில் 22.45 சதவீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 22.01 சதவீதம் அதேபோன்று பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 23.48 சதவீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .