2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

’மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் சம்மேளனம்’ உருவாக்கம்

Editorial   / 2017 ஜூன் 06 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மாவட்ட மட்டத்தில் காணப்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்து, அவற்றின் செயற்றிறனை அதிகரித்து மேம்படுத்தும் நோக்கிலும் ஒருங்கிணைந்த அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டும் 'மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் சம்மேளனம்' உருவாக்கப்பட்டுள்ளது.

அரசசார்பற்ற நிறுவனங்களினுடைய தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே, இந்தச் சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது.  

இந்தச் சம்மேளனத்தின்; தலைவராக எஸ்.பி.சில்வெஸ்ரர், உப தலைவராக எம்.எஸ்.சல்;மா கம்சா, செயலாளராக எஸ்.சிவயோகநாதன், உப செயலாளராக எஸ்.எச்.இம்தியாஸ், பொருளாளராக ஜே.ஆர்.ரமேஸ்குமார், உப பொருளாளராக ஆர்.கஜேந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக வாழ்வாதார அபிவிருத்தி, மது மற்றும் போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் அபிவிருத்தி, சிறுவர் அபிவிருத்தி, சகவாழ்வு மற்றும் சமாதானம், அனர்த்த முகாமைத்துவமும் முதலுதவியும், ஜனநாயகமும் மனித உரிமையும், அமைப்புகளின் இயலுமையை விருத்தி செய்தல். முதியோரும் விசேட தேவையுடையோரும் ஆகியவற்றுக்கான உப குழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றுக்கும் தலைவர், செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X