2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மட்டு. வைத்திசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை, பெற்றி கம்பஸுக்கு அழைத்து வந்து சிகிச்சையளிப்பதற்கு  எதிர்ப்புத் தெரிவித்து, மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று, இன்று (10) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது. 

அரச சார்பற்ற நிறுவனங்களும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், “மட்டக்களப்பு வைத்தியசாலையில் கெவி 19 கோரோனா பரிசோதனை வேண்டாம்”, “அரசே, சிகிச்சைக்காக மக்கள் நடமாட்டமற்ற பிரதேசத்தைத் தெரிவுசெய்”, “மட்டு. வைத்தியசாலை பொதுமக்களுக்கானது”, “தனியான தனிமைப்படுத்தும் வைத்தியசாலையை ஏற்பாடு செய்”, “கொரோனாவை எமக்குத் திணிக்க வேண்டாம்” எனப் பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு, கோஷங்கள் எழுப்பினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .