2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 7,891 அபிவிருத்தித் திட்டங்கள் பூர்த்தி

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்ட 11,968  அபிவிருத்தித் திட்டங்களில் 7,891  திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இன்று  (26) நடைபெற்றது. இதன்போது, இந்த வருடத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித்  திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், அடுத்த வருடத்துக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில்   ஆராயப்பட்டன.

இம்மாவட்டத்தின் அபிவிருத்திக்காகப் பல்வேறு மட்டங்களிலிருந்தும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மூலம் 11,968 திட்டங்கள் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .