2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் மேலும் ஒருவர் தெரிவு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 25 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பிலிருந்து தேசியப்பட்டியல் மூலம் மேலும் ஒரு இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு மேற்கொள்ளப்பட்டதாக இளைஞர் நாடாளுமன்ற பிரிவு அறிவித்துள்ளது.

இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர், காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனும் உள்வாரி பட்டதாரிகள் சங்கத் தலைவருமான ஏ.எம்.முஹம்மத் றிக்காஸ் தெரிவாகியுள்ளார். அவரை பயிற்சிச் செயலமர்வில் கலந்துகொள்ளுமாறும் இளைஞர் நாடாளுமன்ற பிரிவு அறிவித்துள்ளது.

இந்த மாதம் இடம்பெற்ற இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் தெரிவான 225 பேரில் பல்கலைக்கழக மாணவர் வேட்பாளர்களிலிருந்து 15 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக மட்டக்களப்புக்கு மேலும் ஒரு இளைஞர் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கடந்த 07ஆம் திகதி நடத்தப்பட்ட இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 இளைஞர்கள் தெரிவாகியிருந்தனர். தற்பொழுது அந்த எண்ணிக்கை நான்காக அதிகரித்திருக்கின்றது.

இதேவேளை, இளைஞர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகிய உறுப்பினர்களுக்கான பயிற்சி செயலமர்வு அவிசாவளை, பட்டங்கலையிலுள்ள இளைஞர் பயிற்சி நிலையத்தில் இன்று புதன்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும்; 28ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X