Freelancer / 2026 ஜனவரி 30 , மு.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிகப்பெரிய நிறுவனமான அமேசன், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும்.
அமேசன் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பெத் காலெட்டி, இது குறித்து வெளியிட்ட பதிவில், நிறுவனத்தின் படிநிலைகளைக் குறைக்கவும், அதிகாரத்துவத்தைக் களைந்து உரிமையை அதிகரிக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
அமேசன் ஏற்கனவே கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 16,000 இடங்களுடன் சேர்த்து, 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு அமேசான் மேற்கொள்ளும் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்தபோது, அமேசான் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தியது. தற்போது நிலைமை சீராகியுள்ளதாலும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியாலும், கூடுதல் பணியாளர்களின் தேவை குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. (a)
2 hours ago
7 hours ago
29 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
29 Jan 2026