2026 ஜனவரி 29, வியாழக்கிழமை

பால்கனியில் ரணில் ; சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்

Editorial   / 2026 ஜனவரி 29 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2025 ஒகஸ்ட் 22 அன்று கைது செய்யப்பட்டார்.  அந்த விவகாரம் கொழும்பு அரசியலில் தடல்புடலாக பேசப்பட்டது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றார்.

இந்நிலையில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பால்கனியில் அமர்ந்திருக்கும்  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் பட்டமளிப்பு விழாவில் பங்குகொள்ளவா 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மக்களின் பணம் வீணடிக்கப்பட்டது என்ற கேள்வியும் வலுத்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பிலாக ரணிலுக்கு எதிரான  வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (29) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. , 2026  மார்ச் மாதம் முதல் டியர்-அட்.பார் முறையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X