Janu / 2026 ஜனவரி 29 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீகஹகொடுவ அரச தடுப்பு காவல் மையத்திலிருந்து (சிறுவர் இல்லம்) காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டறிய குளியாபிட்டிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
W.F. மயூமி பிரார்த்தனா என்ற சிறுமி, ஜூலை 14, 2025 அன்று சிலாபம் பொலிஸாரால் முதலில் காவலில் எடுக்கப்பட்டு, சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சிலாபம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 17, 2025 அன்று அவர் மீண்டும் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
காணாமல் போன சிறுமி எண் 06, ஹெனேகெதர, உடுபத்தாவ பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் பொதுமக்கள் குறித்த சிறுதியை அடையாளம் காண உதவும் வகையில் அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுமியைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், குளியாப்பிட்டிய OIC யை 071-8591263 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அல்லது குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தை 037-2281222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.


47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago