ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூரை அண்டியுள்ள புட்டிக்குடா வாவியில், நேற்று (26) முதலைக் கடிக்குள்ளான மீனவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர், ஐயங்கேணியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான ஹயாத்துக் கலந்தர் கபீர் (வயது 48) எனும் மீனவரே, தனது கால்கள் கடித்துக் குதறப்பட்ட நிலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.
இம்மீனவர், புட்டிக்குடா வாவிக் கரையோரத்தில் தோணியில் சென்று வலை வீசிக் கொண்டிருந்தபோது, வீசப்பட்ட வலை மர வேர்களில் சிக்கியுள்ளது. அதனை பிரித்தெடுப்பதற்காக மீனவர் தோணியிலிருந்து வாவிக்குள் இறங்கியுள்ளார்.
அவ்வேளையில் மரவேர்களுக்குள் பதுங்கியிருந்த உவர் நீர் முதலை, மீனவரைக் கடித்துள்ளது.
விபரீதத்தை உணர்ந்து கொண்ட தோணியிலிருந்த சக மீனவர், முதலையிடம் அகப்பட்டுக் கொண்ட மீனவரைக் காப்பாற்றி, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்ததும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.
7 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
47 minute ago