2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கும்

Yuganthini   / 2017 ஜூலை 23 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்தச் சம்பளம், 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படுமென, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, கிழக்கு மாகாண சபையால் தற்போது மாதாந்தம் 3,000 ரூபாய் வழங்கப்பட்டுகின்றது.

முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை மதித்து, அவர்களுக்கான ஓர் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக, இது வழங்கப்பட்டுகின்றது.

எனினும் இக்கொடுப்பனவு, அவர்களின் வாழ்வதாரத்துக்குச் சிரமமாக உள்ளதென சுட்டிக்காட்டப்பட்டமைக்கு அமைய, சம்பள அதிகரிப்புக்கு நடவடிக்கைக​ள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .