Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kanagaraj / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
செட்டிப்பாளையம், சமூக மேம்பாட்டு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'மூ.கோ.'வின் 50 ஆவது அகவை மலர் வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும், சனிக்கிழமை (30) களுவாஞ்சிகுடி 'Holiday Resort Inn' இல் நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டார்.
மேலும், இந்நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட பல அரசாங்க உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹமட் நஸீர், மூ.கோ. வின் 50 ஆவது அகவை மலரின் முதற்பதிப்பினைப் பெற்றுக்கொண்டார்.
செட்டிப்பாளையம் சமூக மேம்பாட்டு அமைப்பின் தலைவர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹமட் நஸீருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago