2021 ஜனவரி 27, புதன்கிழமை

முத்திரை இடாத நிறுத்தல் அளவைக் கருவிகளை பயன்படுத்திய 07 வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 17 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி நகரங்களில் முத்திரை இடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளை பயன்படுத்திய 07 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மீது வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் நாளை திங்கட்கிழமை வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அளவீட்டு அளவுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்

மேற்படி நகரங்களில் உள்ள 20 வர்த்தக நிலையங்களில் அளவீட்டு அளவுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் சனிக்கிழமை (16) திடீர்ச் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, முத்திரை இடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளை பயன்படுத்திய 07 வர்த்தக நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அக்கருவிகளையும் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .