2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

முதிரைக்குற்றிகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

பிபிலை பிரதேசத்திலிருந்து ஏறாவூர்ப் பிரதேசத்துக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்படவிருந்த சுமார் 07 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரைமரக் குற்றிகளை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் சனிக்கிழமை (26) இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, மரக்குற்றிகளை ஏற்றிவந்த லொறியை மாவடிச்சேனைப் பகுதியில் வழிமறித்து சோதனை செய்தபோது, உமி மூடைகளினால் மறைக்கப்பட்ட நிலையில் முதிரைமரக் குற்றிகளை ஏற்றிவந்தமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X